யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்திருந்தது.
அத்துடன் கடல் சீற்றம் அதிகரித்து உவர் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக மேற்கு வங்க மாநிலம் பெருமளவான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. சுமார் 128 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் குறித்த புயல் கரையை கடந்த போதிலும் இன்னும் சில நாட்களுக்கு ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.