கருத்தடை மாத்திரையை கலந்தமையே அம்பாறையில் நேற்றிரவு இடம்பெற்ற கலவரத்துக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அம்பாரை நகரில்
தான் உணவில் கருத்தடை மாத்திரையை கலந்ததாக காசீம் எனும் முஸ்லிம் கடை உரிமையாளர் ஒத்துக்கொண்டதையடுத்து
அம்பாறை பள்ளிவாசல் மீது, சிங்கள இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருக்குரான் புத்தகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதட்டநிலை ஏற்பட்டது.
அத்தாக்குதலில் உயிர்தப்பிய முஸ்லிம் நபர் தரும் தகவல்!
அவர்கள் தாக்கும் போது, எங்கட மக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவு போட்டா கொடுக்கின்றீர்கள் என்னு கூறிய நிலையில்,எல்லா முஸ்லிம் கடைகளை பள்ளிவாசலை தீ வைத்து
இறுதியில் முடியுமானால் உங்கள் அல்லாஹ்வை காப்பாற்றச்சொல் என்று சவால் விட்டு சென்றுவிட்டார்கள், என்றும் கூறினார் கூறினார்.
மேலும் இப்பகுதியில் மூன்று முஸ்லிம் ஹோட்டல்கள்மீதும் சிங்களவர் தாக்கி நாசம் செய்துள்ளார்கள் . இது தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணை மேட்கொண்டும் வருகின்றார்கள். இதில் அவர்கள் தாக்கும் போது எங்கட மக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவில் மருந்து போட்டா கொடுக்கின்றாய் இனி எந்த ஒரு எங்கட இடத்திலும் முஸ்லிம்களுக்கு வர்த்தகம் செய்ய விடமாட்டோம்
என்று கூச்சலிட்ட நிலையில் அவர்கள் தாக்கியதாகவும் அதிலிருந்து தப்பி ஓடியவர் கூறினார்.