கருணாவின் மீள் வருகையின் பின்னாலுள்ள பேராபத்து! யாரை கொலை செய்ய சதித் திட்டம்?
நீண்டகால ஓய்வுக்கு பின்னர் அரசியல் மேடையில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அண்மையில் தோன்றியிருந்தார்.
அரசியல் ரீதியாக செயலிழந்துள்ளதாக கருணா மீண்டும் அரசியல் மேடையில் ஏறியமை குறித்து கொழும்பு ஊடகங்கள் பல சந்தேகம் வெளியிட்டுள்ளன.
கருணாவை மஹிந்த மீண்டும் அழைத்து வந்ததன் மூலம் பல கொலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக ஊடகமொன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சமகாலத்தில் செயற்படும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பிரதமர் அலுவலகத்தினால் எச்சரிக்கப்பட்டிருந்தது. குறித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்யும் நோக்கில் கருணா அழைத்து வரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் நான்கு பேர், பொலிஸ் பயங்கரவாத பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குண்டு தாக்குதல் ஊடாக இந்த கொலை திட்டமிடப்பட்டிருந்ததாக புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவர் கலந்து கொள்ளும் கூட்டம் மற்றும் நிகழ்வுகள் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இன்னமும் ஆயுதங்கள் ஒப்படைக்காத கருணா தரப்பு, மஹிந்தவின் ஆதரவை பெறுவதற்காக கருணா, நுகேகொட பேரணியில் ஏற்றப்பட்டாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்து மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய திட்டமிட்டதாக இதற்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தன. எனினும் அதிகாரத்தின் மீது உள்ள பேராசை காரணமாக அவர் இன்னமும் மஹிந்தவுடனே செயற்படுகின்றார்.
மஹிந்த அரசாங்கத்தின் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் இன்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மஹிந்த அதிகாரத்தில் தொடர்ந்தும் இருந்திருந்தால், பிள்ளையான் இன்றும் முதலமைச்சராக செயற்பட்டிருப்பார்.
விடுதலை புலிகள் தலைவரான பிரபாகரன் இல்லாமல் போனதைத் தொடர்ந்து, விடுதலை புலிகளின் அடுத்த தலைவராக கே.பி செயற்பட்டார். இன்று கே.பி ஒரு பக்கம் அமைதியாக உள்ள நிலையில் கோடி கணக்கிலான சொத்துக்கள் ராஜபக்சர்களின் கைக்கு சென்றுள்ளன.
இந்த அனைத்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாகும். பல கொலைகளை மேற்கொண்ட குழுவுக்கு மேலும் ஓர் இரு கொலை செய்வது பெரிய விடயம் அல்ல.
மஹிந்த அதிகாரத்திற்காக மேற்கொள்ளாத ஒன்றும் இல்லை. இதனால் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இது குறித்து சிந்திப்பதற்கான காலம் எழுந்துள்ளது. இந்த அச்சுறுத்தல் குறித்து ரணில் மற்றும் மைத்திரி ஒரு முறை அல்ல பல முறை சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நுகேகொடையில் இணைந்தவர்கள் அதிகாரத்திற்காக இணைந்தவர்கள் எனவும், அதற்காக யாரையும் கொலை செய்து அதன் நன்மை பெறுவதற்கு விரும்புவார்கள். இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் சிந்திக்க வேண்டும் என ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.