கருக்கலைப்பு கனடாவில் சட்டபூர்வமாக ஆக்கப்படுகிறதா?
கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும் என்பதை கனடா மக்கள் விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
Ipsos என்னும் கருத்தாய்வு நிறுவனம் சமீபத்தில் கனடா மக்களிடம் கருக்கலைப்பு சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டுமா என கருத்து கணிப்பு நடத்தியது.
அதில், பெரும்பாலான மக்கள் கருக்கலைப்பு சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
5 பேரில் 4 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மொத்தத்தில் 77 சதவீத கனடா மக்கள் கருக்கலைப்புக்கு பேராதரவு கொடுத்துள்ளனர்.
அதில் 53 சதவீதம் பேர் பெண்கள் முடிவு செய்யும் போது கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
24 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு மிகுந்த கட்டுபாடுகளை அரசு கொண்டு வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
7 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், 10 சதவீதம் பேர் எதை தெரிவு செய்வது என தெரியவில்லை என கூறியுள்ளனர்.