இலங்கையில் இரு காரணங்களுக்காக கருக்க லைப்பு செய்ய அனுமதியளிக்கும் சட்டத்துக்கு கத்தோலிக்க ஆயர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.ஷ
பாலியல் வன்முறையால் உருவான மற்றும் மரபணு பிறழ்வுக்குள்ளான கருக்களைக் கலைப்பதற்குச் சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் கொண்டு வரப்படவுள்ள சட்டத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே பெறப் பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக அனுமதியளிப்பதை உரிய துறைசார் மருத்துவ நிபுணர்களும் ஆதரிக்கின்றனர். இவ்வா றானதொரு நிலையிலேயே ஆயர்கள் மாநாட்டில் அதனை எதிர்க்கும் தீர்மா னம் எடுக்கப்பட்டுள்ளது.
கருவொன்று உருவாகினால் அந்தக் கணத்திலேயே மனித உயிர் உருவாகின்றது. அது பரிசுத்தமானது. அதனைக் கலைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஒருவரின் உரிமைக்காக மற்றுமொருவரின் உரிமையை மீற முடியாது, என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 650 சட்ட விரோத கருக்கலைப்புகள் இடம் பெறுவதாக களனி பல்கலைக்கழகத்தினால் கடந்த வருடம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.