மத்திய அமெரிக்காவின் Honduras-க்கும் Cayman தீவுக்கும் இடையே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 7.6 என்ற மிகபெரிய அளவில் செவ்வாய்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 9.51 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பின் விபரம் இன்னும் தெரியவில்லை, Puerto Rico மற்றும் US Virgin தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜமைக்கா, மெக்ஸிகோ, ஹோண்டூராஸ், கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீடுகள் குலுங்கின.
கியூபா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது, இந்த பகுதிகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.