சீனாவில், அதிபர் ஷீ ஜிங்பிங், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தவறிவிட்டதாக, முன்னாள் அரசு அதிகாரி ரென் ஜிக்கியாங், கடந்த பிப்ரவரியில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அரசின் கீழ் செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவர், அரசை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், அவர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நேற்று நீக்கப் பட்டுள்ளார்.
அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து, வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் மாயமாகி உள்ள ரென், எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.