டெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதனையடுத்து, ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை, நிலவேம்பை விநியோகம் செய்ய வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்.
எனவே, நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலை பரப்புவதால், கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வரவே நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதியலாம் என நீதிமன்றம் கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
அது தொடர்பான செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல்துறை ஆலோசனை செய்துவருவதாக செய்திகள் வந்துள்ளன.
எனவே விரைவில் கமல் மீது வழக்கு பதியலாம் என கூறப்படுகிறது.