கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா – இதுதான் காரணமா?
ஜோ ஜோ ஜோதிகா என்றதும் இப்போதும் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் ஜோதிகா. 36 வயதினிலே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இவர் பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தான் படத்தின் போஸ்டரும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் மகளிர் மட்டும் என்ற தலைப்பை கொடுத்ததற்காக நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
1994ல் மகளிர் மட்டும் என்ற பெயரில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் ஒரு படம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.