கபாலி பாடல்கள் ஒரு பார்வை (பாடல்கள் உள்ளே)
தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் வெளியாகியுள்ளது. இப்பாடல்கள் ஒரு பார்வை
1) தீம் மியூசிக்
நெருப்புடா என ஏற்கனவே தீயை பற்ற வைத்த தீம் சாங், பலரின் எதிர்ப்பார்ப்பாக தற்போது வெளிவந்துள்ள கபாலி ஆல்பத்தில் அதிரி புதிரி ஹிட் ஆவது இந்த தீம் மியூஸிக் தான். அதிலும் அடிக்கிற அழிக்கிற எண்ணம் முடியுமா நடக்குமா இன்னும்.? இந்த ஒரு லைனே சொல்கிறது சூப்பர் ஸ்டார் என்ன போர்ஸில் வந்துள்ளார் என.
2) உலகம் ஒருவனுக்கா
சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஓப்பனிங் சாங் தான் செம்ம மாஸ். அதிலும் சந்தோஷ் நாரயணன் கானா பாலா குரலில் காந்தம் போல் இருக்கிறது. அது மேட்டுகுடியின் கூப்பாடு இனி கேக்காது வரிகள் ரஞ்சித்தின் அக்மார்க் குறியீடு. பவர்பேக் மாஸ் ஓப்பனிங் சாங்
3) வானம் பார்த்தேன்
சூப்பர் ஸ்டார் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மெலடி பாடல், ப்ரதீப்பின் குரலில் மெய் மறக்க வைக்கின்றது, ஏதோ ரஜினி தன் வாழ்வில் தொலைத்துவிட்டு பாடுவது போன்ற பாடல், லேட் பிக்கப் ஆக வாய்ப்பு அதிகம்
4) வீர துறந்துறா
சந்தோஷ் நாரயணின் பேவரட் ராப் சாங், ப்ரதீப் குரலில் மெதுவாக ஆரம்பித்து லாரண்ஸின் குரலில் டெம்ப் ஏற்றி அசத்துகிறது, ரஜினி ஒரு கேங்ஸ்டராக வளரும் பாடல் போல் தெரிகிறது.
5) மாய நதி
சந்தோஷ் கிட்டாரில் செம்ம Strong என்பதை இந்த மாய நதி உணர்த்துகிறது, மிகவும் மெலடி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பாடல் என்பது போல் தெரிகிறது, கேட்க கேட்க பிடிக்கும் ரகம் பாடல் தான்.
மொத்தத்தில் அதிரடி நெருப்பாக அனல் பறக்கும் ரசிகர்களுக்கு மட்டும் தான் இந்த ஆல்பம் என்று நினைத்தால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் கபாலி விருந்து தான்….