கன்னடனே நிறுத்து உன் காடைத்தனத்தை!! தாயகத் தமிழனில் கைவைத்தால்…. ஈழத் தமிழனுக்கு வலிக்குமடா!
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்தும், தமிழருக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து அங்கு வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், வடக்கின் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ். மருதடி வீதியிலுள்ள யாழ். இந்திய துணைத் தூதரக அலுவலகத்திற்கு முன்பாக மேற்படி அமைப்பின் தலைவர் ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மாலை 04.30 மணி வரை இடம்பெறவுள்ளது.