கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம்
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டையன் இந்த மாத இறுதியில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் மூன்று நாட்கள் ஸ்ரீலங்காவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மிகப்பெரிய சொத்தாக தமிழ் சமூகம் காணப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ரொன்றோவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதின்மூன்று வருடங்களின் பின்னர் கனேடிய வெளிவிவாகர அமைச்சர் ஒருவர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை இந்த பயணத்தின் போது கொழும்பில் வைத்து சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கேனஸ்வரன், வடமாகாண ஆளுநர் மற்றும் சிவில் அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தசாப்த காலத்திற்கு பின்னர் ஸ்ரீலங்காவிற்கு வியஜம் செய்யும் வெளிவிகார அமைச்சின் பயணம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் புதிய அத்தியாத்தை பதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அரசியல் சீர்திருத்தம், நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் அதிகாரிகளையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.