கனேடிய தூதரக காவலாளிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் நேபாள அரசு அதிருப்தியில்!
கனேடிய தூதரகத்தில் காவலாளிகளாக பணியாற்றிய 12 நேபாள நாட்டவர் கொல்லப்பட்டமை தொடர்பில் நேபாள அரசு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி, ஆப்கானின் தலைநகர் காபூலில், சிற்றூர்தி ஒன்றைக் குறிவைத்து தலிபான் தீவிரவாத அமைப்பு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், 14 பேர் பலியானதுடன், மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த கனேடிய தூதரகத்தில் காவலாளிகளாக பணியாற்றிய 12 நேபாள நாட்டவர்களுக்கும், எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இது கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கவனயீனமான செயற்பாடா? என்றும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.