கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், காற்றுத் தரம் தொடர்பிலான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள
அல்பேட்டாவின் ஃபோட் மக்முரேப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகையினால் அதனைத் சுற்றியுள்ள இடங்களை உள்ளடக்கிய பிராந்தியங்களுக்கான காற்றுத் தரம் தொடர்பிலான அறிவுறுத்தலை கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் மற்றும் அல்போட்டா சுகாதார சோவைகள் திணைக்களம் ஆகியன வெளியிட்டுள்ளன.
மேலும், எட்மண்டன் பகுதியில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகவும், தெளிவாக பார்க்கக் கூடிய தன்மை குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிவுறுத்தலில், இருமல், தொண்டை அரிப்பு, தலையிடி அல்லது சுவாசக் குறைவு போன்ற அறிகுறிகளை மக்கள் உணர நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள், இதய மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.