கனேடிய-இந்திய கூட்டுத் தயாரிப்பான இந்தத் திரைப்படம் Torontoவில் Woodside சினிமாவில் சனிக்கிழமையும் அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 4 மணிக் காட்சிகளாக திரையிடப் படுகிறது.
“ஏண்டா! தலையில எண்ணை வைக்கல?” திரைப்பட வெளியீடு சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை Torontoவில் நடைபெற்றது. இந்தத் திரைப் படத்தினை முதல் தடவையாக 3 பெண்கள் இணைந்து தயாரித்துள்ளார்கள். சுபா, வாசுகி, ரெஹானா ஆகிய இந்த மூவரில் இருவர் – சுபாவும் Dr.வாசுகியும் – கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண்கள். இவர்களில் சுபா, Yogi & Partners அதிபர் யோகி தம்பிப்பிள்ளையின் துணைவியார், வைத்தியத் துறையில் பணியாற்றும் Dr.வாசுகி, Dr.இந்திரன் ஆசீர்வாதத்தின் துணைவியார். மூன்றாமவர் இசையமைப்பாளர் A R ரஹ்மானின் சகோதரியான A R ரெஹானா ஆவார். இப்படத்திற்கு இசையும் A R ரெஹானா தான்.
இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீடு 9 மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இடம் பெற்றிருக்கிறது. இது ஒரு முழு நீள நகைச் சுவைப் படமாகும். இத்திரைப்படத்தின் நாயகனாக ‘ஆதித்யா’ சேனல் தொகுப்பாளர் அஸார் நடிக்கிறார். மிமிக்ரியில் கலக்கிக் கொண்டிருந்த அஸார் ஏற்கனவே விக்ரமனின் “நினைத்தது யாரோ” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அஸாருக்கு இரண்டு நாயகிகள். ஒருவர் ‘சூது கவ்வும்’ நாயகி சஞ்சிதா ஷெட்டி, மற்றையவர் ஈடன். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.
தொடர்ந்தும் இணைந்து திரைப்படம் எடுக்கும் திட்டம் இருக்கின்றதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தத் திரைப்படத்தை முதலில் வெளியிடுவோம், பின்னர் அது பற்றிப் பார்ப்போம் என்று தயாரிப்பாளர் சுபா தம்பிப்பிள்ளை, கடந்த October மாதம் Brampton Park Inn by Radisson Hotelஇல் நடைபெற்ற “ஏண்டா! தலையில எண்ணை வைக்கல?” திரைப்பட தயாரிப்பு சம்பந்தமான ஆரம்ப ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழகத்தில் இருந்து தயாரிப்பாளினிகளில் ஒருவரான A R ரெஹானாவும் கலந்து கொண்டிருந்தார். “இத்திரைப்படத்தில் கனடாவில் வாழ்ந்து வரும் நடிகர்கள் யாராவது நடிக்கிறார்களா? கனடாவில் எங்காவது காட்சிகள் எடுக்கப் பட்டதா? எதிர்வரும் காலங்களில் கனடாவில் வாழ்ந்து வரும் நடிகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப் படுமா?” என்று கேட்கப்பட்டதற்கு, எதிர்காலத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இவையெல்லாம் சாத்தியப்பட வேண்டுமானால், நாமனைவரும் திரண்டு சென்று இந்தத் திரைப்படத்தினை ஆதரித்தால் மட்டுமே முடியும்! கனேடிய-இந்திய கூட்டுத் தயாரிப்பான இந்தத் திரைப்படம் Torontoவில் Woodside சினிமாவில் நாளை மறுதினம் சனிக்கிழமையும் அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 4 மணிக் காட்சிகளாக திரையிடப் படுகிறது.
“ஏண்டா! தலையில எண்ணை வைக்கல?” திரைப்பட வெளியீடு சம்பந்தமான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை Torontoவில் நடைபெற்றது. இந்தத் திரைப் படத்தினை முதல் தடவையாக 3 பெண்கள் இணைந்து தயாரித்துள்ளார்கள். சுபா, வாசுகி, ரெஹானா ஆகிய இந்த மூவரில் இருவர் – சுபாவும் Dr.வாசுகியும் – கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண்கள். இவர்களில் சுபா, Yogi & Partners அதிபர் யோகி தம்பிப்பிள்ளையின் துணைவியார், வைத்தியத் துறையில் பணியாற்றும் Dr.வாசுகி, Dr.இந்திரன் ஆசீர்வாதத்தின் துணைவியார். மூன்றாமவர் இசையமைப்பாளர் A R ரஹ்மானின் சகோதரியான A R ரெஹானா ஆவார். இப்படத்திற்கு இசையும் A R ரெஹானா தான்.
இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீடு 9 மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இடம் பெற்றிருக்கிறது. இது ஒரு முழு நீள நகைச் சுவைப் படமாகும். இத்திரைப்படத்தின் நாயகனாக ‘ஆதித்யா’ சேனல் தொகுப்பாளர் அஸார் நடிக்கிறார். மிமிக்ரியில் கலக்கிக் கொண்டிருந்த அஸார் ஏற்கனவே விக்ரமனின் “நினைத்தது யாரோ” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அஸாருக்கு இரண்டு நாயகிகள். ஒருவர் ‘சூது கவ்வும்’ நாயகி சஞ்சிதா ஷெட்டி, மற்றையவர் ஈடன். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.
தொடர்ந்தும் இணைந்து திரைப்படம் எடுக்கும் திட்டம் இருக்கின்றதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தத் திரைப்படத்தை முதலில் வெளியிடுவோம், பின்னர் அது பற்றிப் பார்ப்போம் என்று தயாரிப்பாளர் சுபா தம்பிப்பிள்ளை, கடந்த October மாதம் Brampton Park Inn by Radisson Hotelஇல் நடைபெற்ற “ஏண்டா! தலையில எண்ணை வைக்கல?” திரைப்பட தயாரிப்பு சம்பந்தமான ஆரம்ப ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழகத்தில் இருந்து தயாரிப்பாளினிகளில் ஒருவரான A R ரெஹானாவும் கலந்து கொண்டிருந்தார். “இத்திரைப்படத்தில் கனடாவில் வாழ்ந்து வரும் நடிகர்கள் யாராவது நடிக்கிறார்களா? கனடாவில் எங்காவது காட்சிகள் எடுக்கப் பட்டதா? எதிர்வரும் காலங்களில் கனடாவில் வாழ்ந்து வரும் நடிகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப் படுமா?” என்று கேட்கப்பட்டதற்கு, எதிர்காலத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இவையெல்லாம் சாத்தியப்பட வேண்டுமானால், நாமனைவரும் திரண்டு சென்று இந்தத் திரைப்படத்தினை ஆதரித்தால் மட்டுமே முடியும்!