கனேடிய அகதி தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்கள் மீண்டும் அதிகரிப்பு!
தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக மதிப்பீட்டு அறிக்கையொன்று கூறுகின்றது.
கனேடிய அகதி முறையில் 2012ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுப்பதைத் துரிதப்படுத்தின.
ஆனால் அரசின் சமீபத்திய உள்ளக அறிக்கையின்படி இத்தகைய முன்னேற்றகரமான மாற்றங்களிற்கு தற்போது ஆபத்தேற்பட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னரைவிட இரண்டு மடங்கான அகதி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதற்கு அரசினால் பணம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அமுல்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்களினால் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களின் இலக்கு எண்ணிக்கை எட்டப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னைய ஹாப்பர் அரசினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை, ஜெஸ்டின் ரூடோ இன் அரசு இல்லாமல் செய்ததன் மூலம், அகதி விண்ணப்பப் பரிசீலனை முறையில் மேலதிக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இம்மதிப்பீட்டு அறிக்கை வெளியாகி உள்ளமை குறிப்பிடதக்கது.