கனடிய உளவு நிறுவனம் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கனடியர்கள் குறித்த இரகசிய செய்திகளை சேகரிக்க C-51 ஐ உபயோகிக்கின்றது.
ஒட்டாவா– பயங்கர வாத எதிர்ப்பு சட்டமான C-51 ஐ பயன்படுத்தி வெளிநாட்டு சிறைகளில் வைக்கப்பட்டிருக்கும் கனடியர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள கனடிய உளவு நிறுவனம் முன்வந்துள்ளதாக புதிதாக வெளியிடப்பட்ட குறிப்பு தெரிவிக்கின்றது.
கனடா சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் என்டிபி கனடா பாதுகாப்பு புலனாய்வு சேவைக்கும் கனடா உலக விவகாரங்களிற்குமிடையிலான முன்னர் அறியப்படாத தகவல் பகிர்வு செய்யும் இந்த ஏற்பாட்டின் சாத்தியமான விளைவுகள் குறித்து கருத்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.
சேகரிக்கப்படும் தகவல்கள் தூதரக சேவைகளினூடாக
கனடாவின் பாதுகாப்பிற்கு பயமுறுத்தலாக உள்ளதா என்பது குறித்து புலன்விசாரனை செய்ய தொடர்புடையனவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் பகிர்வு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்டத்தை மதிக்கும் கனடியர்களை பாதுகாக்க அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என தனியுரிமை ஆணையர் Therrien எச்சரித்துள்ளார்.