கனடியப் பிரதமருக்கு எதிராக திரும்பும் பொதுமக்கள்! வாக்குறுதிகளைக் காப்பாற்று என்பதே கோசமாக மாறுகின்றது.

கனடியப் பிரதமருக்கு எதிராக திரும்பும் பொதுமக்கள்! வாக்குறுதிகளைக் காப்பாற்று என்பதே கோசமாக மாறுகின்றது.

கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்ற ஒருநிலை ஏற்பட்டுள்ளதானது அவரது தேர்தல் தேனிலவு முடிந்து விட்டதாக என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

குறிப்பாக கடந்த வாரம் பூசணி விதை எறிந்த சர்ச்சை அடங்கு முன்பதாக இன்று இளைஞர் யுவதிகள் கனடியத் தலைநகரில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் மிகவும் ஏளனப் படுத்தியுள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த கனடியப் பிரதமர் நான் உங்களோடு பேசி விடயங்களை அறிய இங்கு வந்துள்ளேன். ஆனால் உங்களில் பலரோ எனக்கு முதுகைக் காட்டியபடி மறுபக்கமாகத் திரும்பி நிற்கின்றீர்கள்.

எனவே கலந்துரையாடுபவர்கள் என்ற நிலையிலிருந்து நீங்கள் மாறுபடுகின்றீர்கள். கலந்துரையடாலில் ஈடுபடுங்கள். கேள்விகளை கேளுங்கள் நான் பதில் தருகின்றேன் என்றார்.

அதற்கும் கூக்குரலிட்ட இளைஞர்கள், யுவதிகளின் மத்தியில் ஒரு இளைஞர் மாத்திரம் உங்களின் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள். அதுவே போதும் எனத் தெரிவித்தார்.

இளவயதான கனடியப் பிரதமர் செல்பி எனப்படும் புகைப்படப் பிரியராகவும் அறியப்பட்டிருந்தாலும் அவரது கனடிய மக்கள் சார்ந்த நிலைப்பாடுகளில் மக்கள் விசணம் கொண்டுள்ளதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு அரசியல் பாராம்பரியத்தில் வந்த ஜஸ்ரின் ரூடோ அவர்கள் முன்னுதாரணமில்லாத வகையில் சம எண்ணிக்கையிலான ஆண் அமைச்சர்களையும், பெண் அமைச்சர்களையும் கொண்ட 30 பேருள்ள அமைச்சரவையை உருவாக்கியிருந்தார்.

இந்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பலரும் அரசியலிற்குப் புதியவர்கள் என்பதும், அவர்களை விட கல்வித் தகமைகள் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இனரீதியான வகையில் அவர்களிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஒரு ஆதங்கம் பல தரப்பாலும் பகிரப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த அமைச்சரவையில் நான்கு சீக்கிய அமைச்சர்களை நியமித்ததும், மற்றயை இனங்களின் குறியீடுகளாக உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்காததும் ஒரு வருத்தமளிக்கும் செயலாகவே ஆரம்பத்தில் பார்க்கப்பட்டது.

கனடாவிலிருந்து- சுரேஷ் தர்மா

396 total views, 396 views today

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News