கனடியத் தமிழ் வரலாற்றில் முப்பது வருடங்களுக்கு முன்ன அரங்கேறிய ஒரு முக்கிய அத்தியாயம்

கனடியத் தமிழ் வரலாற்றில் முப்பது வருடங்களுக்கு முன்ன அரங்கேறிய ஒரு முக்கிய அத்தியாயம்

1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ந்தேதி கடுமையான பனிப்புகாரால் சூழப்பட்டிருந்த நியூபவுண்ட்லாந்து தென்கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள சென் சொட்ஸ்என்ற கடலோரக் கிராமத்திலிருந்து 6 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடலில் ‘அட்லான்டிக் ரீப்பர்’ என்ற 15 மீட்டர் நீளமுள்ள மீன்பிடிப்படகு மீன்பிடித்துக்கொண்டு இருந்தது.

சொற்ப நேரம் பனிப்புகார் விலகியபோது மீன்பிடிப்படகின் தலைவர் கஸ் டோல்ட்ரன் கண்ட காட்சியை தான் உயிருடன் இருக்கும்வரை தன் நினைவில் இருந்து மறையாது எனப் பின்னர் வரணித்தார். அவர் கண்ட காட்சி இதுதான். அவரது மீன்பிடிப்படகில் இருந்து சிறிது தூரத்தில் ஆபத்துக்காலங்களில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கப்பல்களில் கொண்டு செல்லப்படும் ‘லைஃப்போர்ட்’ என்று அழைக்கப்படும் இரண்டு சிறிய படகுகளில் நூற்றிற்கும் மேற்பட்டஆண்கள் பெண்கள் குழந்தைகள் அடங்கிய குழு ஒன்று மிதந்து வருவதைக் கண்டார்.

இந்தச் சிறிய படகுகள் இரண்டில் பாதுகாப்பற்ற நிலையில்; இப்படகுகள் கொள்ளக்கூடியதைவிட மூன்று மடங்கு அதிகமானவர்கள் இருப்பதைக் கண்டு தலைவர் கஸ்டோல்ட்ரன் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக தனது மீன்பிடிப் படகை அவர்கள் படகுகளுக்கு அருகே கொண்டு சென்றார்.அதில் இருந்தவர்கள் உரத்த குரலில் ஏதோ கூறிக்கொண்டு இருந்தார்கள்.

அதில் ‘அகதிகள்’ ‘ஸ்ரீலங்கா’ ‘மொன்றியல்’ ‘கனடா’ என்ற வார்த்தைகள் அவரால்புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் குழுவில் இருந்த ஒருவர் ஆங்கிலத்தில் “இதுமொன்றியாலா?” என கேட்டார்.

அதற்கு தலைவர் கஸ் டோல்ட்ரன் ‘இல்லை மொன்றியாலுக்கு இன்னும் 1000 கிலோ மீட்டர் போக வேண்டும்’ என்று கூற, படகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் இவர்களை ஏற்றி வந்த கப்பலின் தலைவன் வூல்ப்காங்க் பின்டல் இவர்களை இரண்டு லைஃப்போர்ட்களிலும் இறக்கியபோது மொன்ரியால் நகரம் 10 கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது எனக் கூறியதே காரணமாகும். தாம் கனேடிய மாகாணம் ஒன்றாகிய நியூபவுண்ட்லாந்து தீவுக்கு அருகே இருப்பதை படகில் வந்தவர்கள் உணரவில்லை.

சீற்றத்துடன் இருந்த கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை தொடர்ந்தும் கடலில்இருக்கவிட்டால் அவர்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என உணரந்த தலைவர் கஸ்டோல்ட்ரன், உடனடியாக 47பேரை தனது மீன்பிடிப்படகில் ஏற்றிக் கொண்டார். அருகேமீன்பிடித்துக்கொண்டிருந்த நியூபவுண்லாந்தைச் சேர்ந்த 2 மீன்பிடிப் படகுகளுக்குதன் ரேடியோ மூலம் தகவல் அனுப்பி அவர்களையும் அழைத்து மிகுதியானவர்களை அந்த 2மீன்பிடிப் படகுகளில் ஏற்றுவித்தார்.

தலைவர் கஸ் டோல்ட்ரன் தனது படகில் 47பேரை ஏற்றியதால் அவரது படகு பாரம் தாங்கமுடியாமல் இருப்பதைக் கண்ட அவர், தான் பிடித்து வைத்திருந்த மீன்களைக் கடலில் வீசினார். மிகுந்த பசி, தாகம், களைப்புடன் காணப்பட்ட தமிழர்களுக்கு தம்மிடம்இருந்த உணவு, தண்ணீர் ஆகியவற்றை அவரோடு மீன்பிடிப் படகில் இருந்தவர்கள்வழங்கினார்கள்.

பின்னர் தலைவர் கஸ் டோல்ட்ரன் தனது ரேடியோ மூலம் கனடிய கரையோரபாதுகாப்புப் படையினருக்கு சம்பவத்தை அறிவித்தார். அவர்கள் உடனடியாக லெயினாட் ஜே குரோலி என்ற மீன்பிடி கண்காணிப்பு ரோந்துக் கப்பலை சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு பணித்தனர். சில மணி நேரத்தில் அந்த ரோந்துக் கப்பல் சம்பவ இடத்திற்கு சென்று, 3 மீன்பிடி படகில் இருந்த 146 தமிழ்ஆண்கள், 4 தமிழ்ப் பெண்கள், 5 குழந்தைகளை தமது கப்பலில் ஏற்றிக்கொண்டனர்.

அனைவரும் சிறிது விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு, நியூபவுண்ட்லாந்தின் தலைநகர் சென்ற்ஜோன்ஸ்க்கு கொண்டு செல்லப்பட்டனர். அனைவரும் அங்குள்ள மெமோரியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

கனடிய வரலாற்றில் 100 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து ‘கொமகட்டா மாரு’என்ற கப்பலில் வந்த 366 சீக்கிய இனத்தவரை கனடிய கடற்படையினர் கடலிலேயேதடுத்துவைத்து பின் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய சம்பவம்; இரண்டாவது உலகமகாயுத்தத்தின்போது ஐரோப்பாவில் இருந்து நாஸிகளின் கொலை வெறியில் இருந்து தமதுஉயிரைக் காப்பாற்ற யூதர்கள் கப்பல்களில் ஏறி கனடா வந்தபோது அவர்களை கனடாவில்இறங்கவிடாமல் அந்த யூத இனத்தவரை ஐரோப்பாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டசம்பவங்கள் நடைபெற்று இருந்தும், 1986ம் ஆண்டு கடல்மார்க்கமாக வந்த 155 தமிழ்அகதிகளை கனடாவிலே காலடி வைக்க அனுமதிக்கப்பட்டது கனடிய வரலாற்றில் ஒருமுக்கியமான நிகழ்வாகும்.

கனடா உலகத்திலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். கனடாவின் கரையோரத்தில் பல நூற்றுக்கணக்கான மீன்பிடி கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில் வாழும் மீனவர்களிடையே ஒரு உன்னதமான வாழ்க்கை முறை உள்ளது. அதில் முக்கியமானதாக கடலிலே தத்தளித்துவரும் எவரையும் அவர்கள் நிறம் மதம் ஆகியபாகுபாடுகளை மறந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகும். அந்தமரபுப்படியே தலைவர் கஸ் டோல்ட்ரனும் மற்ற இரு மீன்பிடி படகுகளின் தலைவர்களும்நடந்து கொண்டனர். தலைவர் கஸ்ரோல்ரன் கடலிலேயே தத்தளித்துக்கொண்டு இருந்த மனிதஉயிர்களைக் காப்பாற்ற – தனது வாழ்வாதாரத்திற்கு முக்கியமான – தான் பிடித்தமீன்களை கடலில் வீசி எறிந்து அந்த மீன்களின் நிறைக்குச் சமமாக விலை மதிக்கமுடியாத மனித உயிர்களுக்கு தனது மீன்பிடிப் படகில் இடம் கொடுத்தார். இவரின் இந்த இழப்பிற்கு ஒருவரும் நட்ட ஈடு வழங்கவில்லை. இவரின் விலை மதிக்க முடியாதசெயலைப் பாராட்டி கனடிய தமிழர் பேரவை (Canadian Tamil Congress) ஐந்துவருடங்களுக்கு முன்னர் ஒரு பாராட்டு விழா நடத்தி, ஒரு பட்டயமும் வழங்கிக்கௌரவித்தனர்.

இவ்வருடம் ஆகஸ்ட் 11ந் திகதி 155 தமிழ் அகதிகள் கனடாவில் காலடி எடுத்து வைத்து30 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இது தொடர்பாக கனடிய தமிழர் பேரவைநியூபவுண்லாந்திலும், ரொறன்ரோவிலும் பல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளது,

கனடியத் தமிழர் வரலாற்றில் இந்த நிகழ்ச்சியை ஆவணப்படுத்துதல், இவர்கள் கனடாவந்தபோது கனடிய பொதுமக்கள் பத்திரிகைள் வானொலிகள் தொலைக்காட்சிகள் தெரிவித்தபலவிதமான கருத்துக்கள், மற்றும் அன்று ஆட்சியில் இருந்த கனடிய அரசாங்கத்தின்நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் இந்தக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூரப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த 1986ம் ஆண்டு இக்கப்பலில் கனடா வந்தவர்கள்,அவர்களுக்கு பலவழிகளில் உதவி செய்தவர்கள், மற்றும் இக் கொண்டாட்டத்திற்கு உதவிசெய்ய விரும்புவர்கள் உடனடியாக கனடிய தமிழர் பேரவையுடன் தொடர்பு கொள்ளவும்.

– See more at: http://www.canadamirror.com/canada/64736.html#sthash.6tgm1Nca.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News