மதிப்புக்குரிய கரி ஆனந்தசங்கரி மற்றும் நீதன் சாண், லோகன் கணபதி அவர்களிற்கு, கனடியத் தமிழர்கள் சார்பில் தாழ்மையான வேண்டுகோள்.
ஏறத்தாள 5 லட்சம் தமிழர்கள் வாழும் கனடா நாட்டில், இன்றுவரை தமிழர்களிற்காக எந்த ஒரு பொதுவான “TAMIL COMMUNITY CENTRE” இல்லையென்பதை யாரும் மறுக்க முடியாது.
தற்பொழுது நீங்கள் மூவரும் நினைத்தால் இதை இலகுவாக நிறுவ முடியும், TORONTO அல்லது MARKHAM நகரசபையில்.
சமூகம் சார்ந்த இப்படியான வேலைத்திட்டத்திற்கான முழுச் செலவை, எப்படி உள்வாங்க வேண்டுமென்பதை இலகுவாக மக்களிற்கு புரியும் படி பதிவு செய்கின்றேன்.
உதாரணத்திற்கு, இதை நிறுவதற்கு 10 மில்லியன் டொலர்கள் செலவு வருமாயின் அதில்,
1) 25% பணத்தை($2.5 மில்லியன்) FEDERAL GOVERNMENT இடமிருந்து பெற முடியும்.
2) 25% பணத்தை($2.5 மில்லியன்) PROVINCIAL GOVERNMENT இடமிருந்து பெற முடியும்.
3) 25% பணத்தை ($2.5 மில்லியன்) பணத்தை MUNICIPALITY இடமிருந்து பெற முடியும்.
4) இறுதி 25% பணத்தை சமூகத்திடம் இருந்து திரட்டிக் கொடுக்க வேண்டும்.
இந்த 4 விடையமும் விரைவாக அமைந்தால், வெகு விரைவில் தமிழர்களிற்கான “TAMIL COMMUNITY CENTRE” உருவாக்க முடியும்.
கரி ஆனந்தசங்கரி அவர்கள் Federal பக்கத்தால் உதவியை செய்து கொடுக்க, நீதன் சாணும் மற்றும் லோகன் கணபதி அவர்களும் MUNICIPAL பகுதியால் உதவியை பெற்று, மறு முனையில் PROVINCIAL கட்சிகளிடம் தேர்தல் நேரத்தில் அழுத்தமான கோரிக்கைகளை வைத்து அவர்களின் பங்கையும் பெற முடியும்.
இறுதியாக சமூகத்தின் 25% பங்கை இலகுவாக சேர்க்க முடியும். அது எப்படியென்றால், தமிழர் தெருத் திருவிழாவால், வருடம் வருடம் கிடைக்கும் இலாபத்தை ($300,000 – $400,000) இந்த வேலைத் திட்டத்திற்கு பயண்படுத்த முடியும். அதை காங்கிரஸ்(CTC) அமைப்பு மறுக்க முடியாது !
இந்த வருடம் மாகாணத்திற்கும் மற்றும் நகரசபைக்கான தேர்தல் வருகின்றது, மற்றும் அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தல் வருகின்றது. அதை கருத்தில் கொண்டு மதிப்புக்குரிய கரி ஆனந்தசங்கரி, நீதன் சாண் மற்றும் லோகன் கணபதி அவர்களும் கடுமையாக இந்த வேலைத்திட்டத்திற்க்காக உழைப்பார்களென்று மக்கள் நம்புகின்றார்கள்.
தயவு செய்து மக்களின் நம்பிக்கையை மூவரும் கை விடாதீர்கள். நீங்கள் கை விட்டால், மக்களும் கை விட்டு விடுவார்கள் 🙂
பதவியில் இருக்கும் போது தான் உங்களால் சமூகத்திற்காக எதையும் செய்ய முடியும். பதவி போன பிறகு, நீங்களும் சாதாரண மக்கள் தான். அரசியல் ஒரு வட்டம் !
சிந்தியுங்கள் செயற்படுங்கள் ……,,,,,
உங்களின் நண்பன்,
பராசுரன்