இருட்டில் நாணயங்களை இழக்கும் சந்தர்ப்பத்திற்கு ஒரு குட் பை சொல்லலாம்.
துருவ ஒளி எனப்படும் வடக்கத்திய விளக்குகளை சித்தரிக்கும் புதிய இரண்டு டொலர் நாணயம் டாக்டர் Timothy Hsia மற்றும் அவரது சகோதரர் Stephen ஆகியவர்களால் வடிவமைக்கப்பட்டு தேசிய போட்டி ஒன்றின் ஒரு பகுதியாக பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டது. இந்த சகோதரர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ்கின்றனர்.
இந்த நாணயம் உலகின் முதலாவது இரு உலோகங்களால் ஆக்கப்பட் வண்ண நாணயமாகும்.
கனடா 150 கொண்டாட்டத்திற்காக வெளியிடப்பட்ட இந்த விசேட நாணயத்தை றோயல் கனடியன் மின்ரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.
99.99-சதவிகிதம் தூய வெள்ளியினாலான இந்த நாணயம் 7.96-கிராம்கள் எடையும் 27-மில்லி மீற்றர்கள் விட்டமும் கொண்டது.
கனடாவின் 150=வது பிறந்த தின நினைவாக கனடா வங்கி புதிய 10டொலர்கள் பில் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.