கனடா-ஸ்காபுரோ சென்டர் நிலையத்தில் 15வயது பையன் குத்தி கொலை?
ரொறொன்ரோ-ஸ்காபரோ சென்டர் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 15முதல் 25 பேர்கள் அடங்கிய குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் 15-வயதுடைய பையன் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து விட்டான்.
மக்கோவான் மற்றும் எலஸ்மியர் வீதிக்கு அருகில் அமைந்துள்ள போக்குவரத்து நிலையத்தில் இரவு 9.20மணியளவில் நடந்துள்ளது.
இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் குழு ஒன்று ஸ்காபுரோ ரவுன் சென்டரை விட்டு ஸ்காபுரோ சென்ரர் நிலையத்தின் உள்ளே நின்ற சமயம் மற்றொரு இளைஞர் குழுவினருடன் சண்டை ஏற்பட்டுள்ளதென நம்பவதாக பொலிசார் தெரிவித்தனர்.
சண்டையின்போது 15வயது பையன் ஒருவன் குத்தப்பட்டுள்ளான்.
வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட போதிலும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டான்.
சந்தேக நபர் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் நடந்த மேடை சரியான பிசியாக காணப்பட்டதெனவும் பார்வையாளர்கள் அநேகர் காணப்பட்ட போதிலும் பொலிசாருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 100பேர்கள் வரை காணப்பட்டதாகவும் சம்பவத்தை கண்டவர்கள் அல்லது தங்கள் போன்களில் பதிவு செய்தவர் முன்வருமாறு பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர்.ஒரு சிறு தகவலும் விசாரனைக்கு பெரிதும் உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் பல கண்காணிப்பு கமராக்கள் உள்ளதால் மேலாதிக விபரங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
தனது மகன் வெள்ளிக்கிழமை இரவு கொண்டாட்டம் ஒன்றிற்கு போக திட்டமிட்டிருந்ததாக சனிக்கிழமை காலை தெரிவித்தார்.