கனடாவில் பத்துப் பேரைப் பலியெடுத்த வாகன தாக்குதல் சம்பவத்தில் சிறிலங்காவை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்தனது.
எனினும் இந்த சம்பவத்தில் எந்தவொரு இலங்கையர்களும் உயிரிழக்கவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளது.
“நேற்று முன்தினம் டொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை.
பயங்கரவாத தாக்குதலில் சிறிலங்கா பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்படடுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
டொரான்டோவில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அந்நாட்டு பொலிஸ் மற்றும் தூதரக அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எனினும் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபடுவோம். உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்தால் விரைவில் அறியத்தருவோம் என சிறிலங்கா வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது”
இலங்கை ஹொரண பகுதியை சொந்த இடமாக கொண்ட 46 வயதான ரேனுகா விஜயசிங்க என்பரே உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.
டொரான்டோ கல்விச் சபைக்காக கடமையாற்றும் இவர் 7 வயதுச் சிறுவனின் தாயார் எனவும் இவரது தாய், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் சிறிலங்காவில் வசித்து வருவதாகவும் தெரியவருகிறது.
மிகுந்த இறை நம்பிக்கையும் கடின உழைப்பும் கொண்ட இப்பெண்ணின் இறப்பு தமக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனடா வாழ் இலங்கையர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் டொரான்டோ மாநிலத்தில் சன நெருக்கடி மிகுந்த North York பகுதியில் பொதுமக்களின் மீது வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிச்சென்று மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய Alek Minassian என்ற 25 வயது நபரை பொலீஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.