கனடா- ரொறொன்ரோவில் களைகட்டும் கரிபியன் கார்னிவல் அணிவகுப்பு.
ரொறொன்ரோ-சனிக்கிழமை இடம்பெறும் வருடாந்த பிரமாண்டமான கரிபியன் அணிவகுபபில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.இதன் காரணமாக லேக்க்ஷோர் புளுவாட் மேற்கு சனிக்கிழமை மூடப்பட்டிருக்கும்.
சிறகுகள் மற்றும் வெள்ளி வட்டுக்களால் தங்களை அலங்கரித்த வண்ணம் அணிவகுப்பில் மக்கள் கலந்து கொள்வர்.
ஒரு மில்லியனிற்கும் அதிகமான மக்கள் இந்த அணிவகுப்பை காண திரள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சனிக்கிழமை காலை 10மணிக்கு ஆரம்பமாகி இரவு 8மணிக்கு முடிவடையும். Exhibition Place மற்றும் பியர் கூடாரங்களிற்கான அனுமதி வயதானவர்களிற்கு 20டொலர்களாகும். லேக் ஷோரில் இருந்து காட்சிகளை பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
வானிலையும் ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலையில் சிறிது சாரல்கள் தோன்றினாலும் பகல் அண்மிக்க முடிந்து விடும்.
பிற்பகல் சூரியன் மற்றும் மேகத்துடன் கூடி வெப்பநிலை 26 C.ஆக காணப்படும்.
ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி மற்றும் ரொறொன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சான்டர்ஸ் ஆகியோர் அணிவகுப்பை ஆரம்பித்து வைக்கின்றனர். உள்ஊர் அரசியல் வாதிகளும் கலந்து கொள்வர்.