கனடா போஸ்ட் சீருடையில் பார்சல்கள் திருடிய பெண்.
கனடா போஸ்ட் சீருடை அணிந்த பெண் ஒருவர் வீடொன்றின் முன் FedEx-இனால் வைக்கப்பட்டிருந்த பார்சல்களை திருடிய சம்பவம் வீட்டு சொந்த காரரின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது..இது குறித்து பொலிசார் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொக்குயிலரம் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தபால் விநியோகிக்கும் ஒருவர் கையில் ஒரு பார்சலுடன் குறிப்பிட்ட வீட்டின் கதவை அணுகி பின்னர் இரண்டு பார்சல்களுடன் திரும்பி சென்றது பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
நவம்பர் 3-ந்திகதி இரண்டு டிலிவரிகள் இடம்பெற்றுள்ளது.முதலாவது டிலிவரி FedEx னால் செய்யப்பட்டது.90நிமிடங்களிற்கு பின்னர் கனடா போஸ்ட் சீருடை அணிந்த பெண் பெரிய பிறவுன் பெட்டியுடன் வீட்டு கதவை அணுகினார்.சிறிது நொடிகள் கதவில் தட்டி விட்டு பதிலிற்கு காத்திருப்பது போன்று பாசாங்கு செய்து ஒளிந்து நின்றுவிட்டு பிறவுன் நிற பெட்டியுடனும் FedEx வைத்து விட்ட வெள்ளை பார்சலுடனும் வெளியேறுவது பதிவாகியுள்ளது.
FedEx ரசீதிற்கான பார்சல் கிடைக்காததை கண்டறிந்த போது தபால் திருட்டு நடந்துள்ளதாக வீட்டு சொந்தகாரர் அறிந்து கொண்டார். யாரோ பார்சலை எடுத்து சென்றுள்ளதாக நினைத்தனர்.ஆனால் கனடா போஸ்ட் இவ்வாறு செய்யும் என இவர்கள் நினைத்திருக்கவில்லை.
கனடா போஸ்டும் இது குறித்து விசாரனையில் ஈடுபட்டுள்ளது.