கனடா பூராகவும் மாவீரர் நாள் சேவைகள்.
ஒட்டாவா- யுத்தத்தில் இறந்த கனடியர்களை நினைவு கூர்ந்து கௌரவப்படுத்தும் நிகழ்வுகள் இன்று கனடா முழுவதிலும் இடம் பெறுகின்றது.
முக்கியமான நிகழ்வு ஒட்டாவாவில் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ்ரன் மற்றும் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்வாக அமையும்.
பாரம்பரியமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தேசிய போர் ஞாபகார்த்த சின்ன மையத்தை சுற்றி கூடுவர்.
ஆப்கானிஸ்தான் போரில் தனது மகனை பறிகொடுத்த பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த தாய் ஒருவர் இந்த வருடத்தின் Silver Cross Mother -நாட்டிற்காக தங்கள் பிள்ளைகளை இழந்த அனைத்து தாய் மார்களின் சார்பாக போர் ஞாபகார்த்த நினைவு சின்னத்தில் மலர் வளையம் ஒன்றை வைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடமையில் இருந்த சமயம் கொல்லப்பட்ட இராணுவ வீரரின் தாயாரான கொலின் விற்ஸ்பற்றிக் என்பவரே இன்றய தினம் அனைத்து கனடிய அன்னையர்களின் சார்பாக மலர்வளையத்தை சமரப்பிப்பார்.
இவரது மகன் கோப்ரல் டெரென் விற்ஸ்பற்றிக் 2010ல் ஆப்கானிஸ்தானில் ஒரு வெடிகுண்டு சாதனத்தின் மீது மிதித்ததால் கொல்லப்பட்டார்.