கனடா நாட்டை ஆட்சி செய்தவர்களில் சிறந்த பிரதமர் யார் தெரியுமா?
கனடா நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்களில் சிறந்த பிரதமராக தற்போது பதவியில் உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு கல்வி துறை வல்லுநர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனடா நாட்டு வரலாற்றில் இதுவரை ஆட்சி செய்த பிரதமர்களில் சிறந்த மற்றும் மோசமான பிரதமர்கள் யார் என நாடு முழுவதும் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த திறமையான கல்வி துறை வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் குடிமக்களிடம் நற்பெயரை ஏற்படுத்தி பெரும் செல்வாக்கு பெற்று சிறந்த முறையில் செய்வதாக தற்போதைய லிபரல் கட்சியை சேர்ந்த பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆய்வில் வெளியான சிறந்த பிரதமர்களின் பட்டியலும் அவர்களுக்கு வல்லுநர்கள் அளித்துள்ள மதிப்பெண்களும் இதோ !
ஜஸ்டின் ட்ரூடோ (லிபரல் கட்சி, 2015 முதல்) – 3.27
பால் மார்ட்டின் (லிபரல் கட்சி, 2003-06) – 2.33
ஜோன் தாம்சன் (கொன்சர்வேட்டிவ் கட்சி, 1892-94) – 2.27
ஆர்தர் மெய்கன் (கொன்சர்வேட்டிவ் கட்சி, 1920-21;1926) -2.05
ஜோ கிளார்க் (கொன்சர்வேட்டிவ் கட்சி, 1979-80) -2.03
சார்லஸ் டப்பர் (கொன்சர்வேட்டிவ் கட்சி, 1896) – 1.81
ஜோன் அப்பாட் (கொன்சர்வேட்டிவ் கட்சி, 1891-92) – 1.80
மெக்கன்ஸி போவல் (கொன்சர்வேட்டிவ் கட்சி, 1894-96 – 1.53
ஜோன் டர்னர் (லிபரல் கட்சி, 1984) – 1.53
கிம் கேம்பல் (கொன்சர்வேட்டிவ் கட்சி, 1993) – 1.36
மேலே உள்ள பட்டியலில் இடம்பெற்று இருப்பது கனடாவை குறுகிய ஆண்டுகளில் ஆட்சி செய்து சிறந்த பிரதமர் எனப்பெயர் பெற்றவர்கள் ஆகும்.
இதே வரிசையில், கனடாவை நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்த சிறந்த பிரதமர்களின் பட்டியலில் லிபரல் கட்சியை சேர்ந்த வில்லியம் லியோன் மெக்கன்ஸி கிங் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இவரது ஆட்சி காலம் 1921-26, 1926-30 மற்றும் 1935-48 வரை ஆகும். இவருக்கு வல்லுநர்கள் 4.76 மதிப்பெண்களை வழங்கியுள்ளனர்.
இதே பட்டியலில் முன்னாள் பிரதமரான கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஸ்டீபன் ஹார்பருக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.