கனடா தினத்தன்று வினிபெக்கை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சோகம்.
மிக நெருக்கமான வினிபெக் கிழக்கு பகுதி சமுதாயத்தை கனடா தினத்தன்று பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சிறிய விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் மோதியதால் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நாலு பயணிகள் விமானமான Piper-PA 28-140 வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில மோதியுள்ளது.
மனிரோபா ஸ்பிறிங்வீல்ட்ல் நெடுஞ்சாலை15ல் லின்கிறெஸ்ட் விமான நிலையத்தில் விபத்து நடந்தது. 24வருடங்களில் முதல் தடவையாக குறிப்பிட்ட விமான நிலையத்தில் இந்த மோதல் நடந்துள்ளதாக மனேஜர் தெரிவித்துள்ளார்.
ஆர்சிஎம்பி மற்றும் தீயணைப்பு பிரிவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர்தீயணைப்பு பிரிவினர் எரிந்து கொண்டிருந்த இடிபாடுகளை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட எவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
விமானம் 20வருடங்கள் பழமை வாய்ந்தது அத்துடன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
விமானத்தில் எத்தனை பேர்கள் இருந்தனர் என்பது மற்றும் விபத்திற்கான காரணம் போன்றன தெரியவரவில்லை.