இலங்கையில் தமிழ் மக்கள்; பெரும்பான்மை மக்களாலும் அந்த அரசாங்கத்தாலும் அடக்கப்படுகின்ற நிலை மாறி மதிக்கப்படுகின்ற ஒரு இனமாக மாற வேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக உரிமைகள் தொடர்பான சட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்காக கனடிய அரசு சர்வதேச ரீதியாக குரல்கொடுக்கும்” என்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற “தமிழர் தெரு விழாவில்” சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய கனடாவின் பிரதமர் திரு ஜஸ்டின் ரூடுடோ தெரிவித்தார்.அ
அயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றிய போது கனடாவின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக திரு ஹரி ஆனந்தசங்கரி,பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தார்.
சனிக்கிழமையும் , ஞாயிற்றுக்கிழமையும் இந்த தமிழர் தெருவிழா இடம்பெறும். நூற்றுக்கணக்கான தமிழ்ர் வர்த்தக நிலையங்களும் பிரதான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தஙகள் வர்த்தகச் சாவடிகளை இங்கு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.