கனடா செந்தில்குமரனின் நிவாராண நிதியம் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்டத்தில் “அக விழி திறப்போம்” செயற்திட்டம்
“அக விழி திறப்போம்” இது ஒரு மாணவ சமூகத்தை நல்வழிபப்டுத்தும் செயற்திட்டமாகும் மது பாவனை, போதை வஸ்து, புகைத்தல், பாலியல்து துர்நடத்தை ஆகியவற்றில் இருந்து மாணவ சமூகத்தை நல்வழிபப்டுத்தும் செயற்திட்டம்”
அண்மையில் (2016.11.07) திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையத்தின் ஏற்பாட்டில் கனடா வாழ் தேசத்து உறவான செந்தில் குமரனின் நிதி பங்களிப்பு ஊடாக அகவிழி திறப்போம் என்னும் கருப்பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ கருத்தரங்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் முதற்கட்ட்மாக கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 150 க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்
தாயக மாவட்ட்ங்களின் தற்போதைய நிலை – மது பாவனை, போதைவஸ்து,புகைத்தல் நுகர்வு, பாலியல் துர்நடத்தை.
போருக்கு பின்னரான காலபப்குதியில் அதாவது 2009ம் ஆண்டுகளுக்கு பின் வடககு,கிழக்கில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் போதை பொருட்களின் நுகர்வு மிக சடுதியாக அதிகரித்த நிலைமைகளையும் பாலியல் வன்புணர்ச்சி போன்ற சமூக விரோத செயற்பாடுகளும ;அதிகரித்த நிலையில் இருப்பதை புள்ளி விபரங்கள ; வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக இதில் இளம் மாணவ பருவத்தினரும் உட்பட்டிருப்பது தெரியவருகின்றது.
சிறுவர் நன்னடத்தை பிரிவு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு ஆகியவற்றில் இருந்து கிடைத்த இரகசிய தகவலின் படி சராசரியாக ஒவ்வொரு மாதமும் 25ற்கும் குறையாத இது போன்ற முறைப்பாடுகள் தமக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் வறுமை, பொருளாதார நெருக்கடி, மன விரக்தி, தற்கொலை போன்ற சம்பவங்களும் அதிகரித்து செல்வதாக புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றது.
இத்திட்டத்தின் நோக்கம்:
கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களை மது பாவனை,
புகைத்தல், பாலியல் தூந் டத்தை என்பவற்றில் இருந்து விலக்கி காத்திரமான ஆளுமையுடைய மாணவர் சமுதாயத்தை கடடி;யெழுப்புதலும் மாவட்டத்தின் பண்பாடடு; கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க கூடிய சமூகத்தை உருவாக்கல்.
ஆசிரியர்களை மதித்து தங்களுடைய கல்வி வளாச்சி, தமது மற்றும் சமூகத்தின் எதிர்கால வளாச்சி, என்பதனை ஆய்ந்து செயற்படககூடிய வகையில் மாணவ சமுதாயத்தை கடடியெழுப்புதல்.
கலாச்சார சீரழிவு நடவடிக்கைகளினால் ஏற்படும் வருமான இழப்பை தடுத்து நிறுத்தி பொருளாதார நலன ; சார் விடயங்கள் மூலமாக அவர்களின் வாழ்வாதாரத்தை
முன்னேற்ற நடவடிக்கை எடுத்தல்.
தலைமைத்துவ ஆற்றல் கொண்ட மாணவர் சமுதாயத்தை கடடியெழுப்புதல்.போன்றனவாகும்.
இக் கருத்தரங்கானது கவிஞர் தீபசெல்வன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, யாழ்மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளார் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் த. முருகவேல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட உதவிப்பதிவாளர் சர்வேஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்திய கலாநிதி மா.ஜெயராசா, சட்டத்தரணி மற்றும் ச. விஜயராணி , இவர்களுடன் வளவாளர்கள், கல்வி சார் உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள், ஆசிரியார்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.