கனடா-கல்கரி வீடொன்று ISISதாக்குதல் பட்டியலில். குடும்பத்தினருக்கு ஆர்சிஎம்பி எச்சரிக்கை?
கல்கரியை சேர்ந்த மனிதரொருவர் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளார்.இவரது வீடு ISIS இனரின் தாக்குதல் பட்டியலில் இடம்பெற்றிருப்பதே காரணமாகும்.
இவர்களின் பட்டியலில் 151-கனடியர்கள் இடம்பெற்றுள்ளனர்.உலகம் பூராகவும் 8,300மக்களின் மின் அஞ்சல் மற்றும் விலாசங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவர்களிற்கு தகவல் தெரிவிப்பதற்காக பொலிசார் இவர்களுடன் தொடர்கொள்கின்றனர்.
கல்கரியை சேர்ந்த 32-வயது மனிதர் எட்டு மாதங்களிற்கு முன்னர் வீட்டை வாங்கினார். இவர்களிற்கு முந்திய குடியிருப்பாளரின் இணைய கணக்கில் வீடும் இலக்கு பட்டியலில் அடங்குகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வயது பெண் குழந்தையின் தந்தை இது குறித்து கவலை கொண்டுள்ளார். தனது பெயரை வெளியிட வேண்டாம் என ஆர்சிஎம்பியினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பிட்ட வீட்டில் குடியிருந்த முன்னய குடியிருப்பாளரின் LinkedIn அல்லது Facebook கணக்கு ஊடுருவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய குடியிருப்பாளர்களை எதற்கும் அவதானமாக இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அல்லது ஏதேனும் இடம்பெற்றால் தங்ளுடன் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வீட்டிற்கு பாதுகாப்பு அமைப்பை பொருத்துகின்றார்.
இவரது கவலை அயலவர்களிடமும் எதிரொலிக்கின்றது.
கடைசியாக கிடைத்துள்ள பட்டியலில் பெரும்பாலானவை பொதுமக்களினதாகும்.
இவ்விடயம் ஒரு உணர்வு பூர்வமானதாகையால் மேலதிக கருத்துக்கள் எது வெளியிடப்படவில்லை.