கனடா கல்கரி குடும்பத்தை குழப்பியுள்ள மாம்பழ மர்மம்?
கனடா-452கிராம் எடையுள்ள மாம்பழம் ஒன்று மிக வேகமாக வந்து கல்கரியில் உள்ள குடும்பம் ஒன்றின் கொல்லைப்புறத்தில் விழுந்துள்ளது. செவ்வாய்கிழமை இச்சம்பவம் நடந்தது. குடுப்பதினரின் நீச்சல் தடாகத்தின் கவரை சுருட்டிக்கொண்டிருந்த லிசா எகன் என்பவர் மயிரிழையில் தப்பிவிட்டார்.
இது ஒரு மர்மமாக உள்ளது.
பலத்த சத்தத்துடன் திடீரென கவரின் மேல் விழுந்து பயத்தை ஏற்படுத்தியது என அவர் தெரிவித்தார்.தண்ணீரில் மாம்பழத்தை கண்டுகொள்ள முன்னர் கவரின் கீழ் மாம்பழம் தடாகத்தில் மிதந்துள்ளது.
ஆச்சரியப்படும் விதமாக மாம்பழம் சேதமடையவில்லை.
எவராவது தடாகத்திற்குள் எறிந்திருப்பார்களென எகன் நம்பவில்லை.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விழுந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.ஆனால் விமானமொன்றிலிருந்து விழுந்திருக்கலாம் என தம்பதியர் கூறுகின்றனர்.
இவர்களது வீடு கல்கரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
எவ்வாறு ஒரு பெரிய பழம் விமானத்திலிருந்து கீழே விழ முடியும் எவருக்கும் தெரியாது. இந்த பெரிய மாம்பழ மர்மம் ஒரு போதும் தீர்க்க முடியாமலும் போகலாம்.