கனடா கந்தசுவாமி கோவிலில், நீண்ட காலமாக ஒரு தலைவர்தொடர்ந்து செயற்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் .
கனடாவில் தமிழரின் பாரம்பரியத்தை சீராக்கும் ஆலயமாக விளங்கும் கனடா கந்தசுவாமி கோவிலில் ,சிறப்புக்கு குறைவிருக்கவில்லை ,வெள்ளைக்காரரும் விழுந்து வணக்கும் புனிதத்துடன் விளங்கும் ஆலயத்தில் யாப்பு விதிகளை மீறி ஒரு தலைவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக பொறுப்பில் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது,
காலம்காலமாக் தமிழர் பாரம்பரியமும் மரபும் உலக நாடுகளில் போற்றப்படுவதர்க்கு காரணமே தமிழன் பண்பாட்டு விழுமியங்களை சீராக கடைப்பிடிப்பதுதான் ஆனால் ஒரு சிலரின் செயலால் பல விடயங்கள் தலைகீழாக மாறுகின்றன .
பெரும் புகழ்வாய்ந்த ஆலயத்தில் யாப்பு விதிகளை மீறி தலைவராக செயர்ப்படுவதும் ,புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்யாமல் பின்னடிப்பதும் பெரும் விசனத்தை உண்டுபண்ணியுள்ளது .
முத்து சுப்பிரமணியம் என்பவர் தொடர் தலைவராக செயற்படுகின்றார் – அவர் தொடர்பில் மக்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு ஆலய நிர்வாகம் பதில் வழங்குமா ?