கனடா ஒலிம்பிக் குழுவுக்கு பெருமை தேடிக்கொடுக்கும் 56 வயது பெண்
கனடாவில் இருந்து இம்முறை இடம்பெறும் றியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்பவர்களில் அதிக வயதான நபராக 56 வயதான லெஸ்லி தோம்சன் என்ற பெண் உள்ளார். பெண்களுக்கான படகு போட்டியில் கலந்துகொள்ளும் லெஸ்லி தோம்சன் எட்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமையும் முக்கிய அம்சமாகும்.
16 வயதில் இருந்து கலந்துகொள்ளும் கனேடிய வீர, வீராங்கனைகளில் 56 வயதுடை லெஸ்லி தோம்சன், முதியவராக இருந்தாலும், அவர் கனடாவிற்கு பெறுமை தேடிக் கொடுக்கும் வகையில் எட்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை அனைவராலும் பராட்டப்பட்டு வருகின்றது.
பிரேஸிலின் நியோ நகரில் அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 37 விளையாட்டுக்களில் கலந்துகொள்வதற்காக கனடாவில் இருந்து 313 வீர, வீராங்கனைகள் அங்கு செல்லவுள்ளனர். அவர்களுடன், 98 பயிற்சியாளர்களும், 107 உதவி அலுவலர்களும் பிரேஸில் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் அதிகளவான வீரர்களாக 132 வீரர்கள் ஒன்ராறியோவில் இருந்தும், 68 வீரர்கள் பிரிட்டிஸ் கொலம்பியாவில் இருந்தும், 54 வீரர்கள் கியூபெக்கில் இருந்தும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.