கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா குடியமர்வு துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் கனடாவில் புகலிடம் கோரி துருக்கி நாட்டை சேர்ந்த 1,300 பேருக்கும் அதிகமாக விண்ணப்பம் செய்ததாகவும், இவர்களில் 398 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துருக்கியில் கடந்தாண்டு ஜூலை மாதம், இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.