கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லொறி சாரதிகளும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.
அதேபோல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லொறி சாரதிகள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு தெரிவித்தது.
50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசரகால நிலை இதுவாகும். இதற்கு முன்னதாக 1980-ம் ஆண்டுவாக்கில் கனடாவில்அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
தற்போது, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும் நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை இராணுவம் களமிறக்கபப்டவில்லை. அவசரகால நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]