கனடாவில் 12-நாட்களில் எவ்வளவு உணவு பொருட்களை வால்மார்ட் எறிகின்றனர் தெரியுமா?
கனடா-டோனட்ஸ் மற்றும் கேக் வகைகள். இன்னமும் முறு முறுப்பாக இருக்கும் செலரி தண்டுகள்.பைகள் நிறைந்த பிரகாசமான பழுத்த ஆரேஞ்சுகள். இவை அனைத்தும் பொருட்கள் வாங்கும் பட்டியல் போன்று தெரியலாம் ஆனால் இல்லை. இவை அனைத்தும் வால்மார்ட்டின் குப்பைத்தொட்டிக்குள்.
CBC செய்தி நிறுவனத்தினரின் விருதுபெற்ற தொலைக்காட்சி தொடரான மார்க்கெட்பிளேஸ் ரொறொன்ரோவில் அமைந்துள்ள இரு வால்மார்ட் கடைகளிற்கு சென்று எவ்வளவு உணவு பொருட்களை கம்பனி வெளியே வீசுகின்றது என்பதை கண்டறிய அவர்களது குப்பை தொட்டிகளை பார்த்துள்ளனர்.
வால்மார்ட்டின் உள் ஆட்கள் இதயத்தை பிளக்கும் அளவிலான உணவுப்பொருட்களை வால்மார்ட் எறிவதாக தெரிவித்துள்ளனர்.
12-ற்கும் மேற்பட்ட விஜயங்களை மேற்கொண்ட மார்க்கெட் பிளேஸ் ஊழியர்கள் திரும்ப திரும்ப பேக் செய்யப்பட்ட பொருட்கள், உறைய வைத்த பொருட்கள், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்றனவற்றை கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலான பொருட்கள் உரமாக்கலிற்கு பிரிக்கப்படாது அவற்றின் பொதிகளிற்குள் இன்னமும் இருந்தன.
அதுமட்டுமன்றி தண்ணீர் போத்தல்கள், உறையவைக்கப்பட்ட செரி பழங்கள் இன்னமும் குளிராக மற்றும் மாஜரின் பெட்டிகள்.
உணவு வீணடிப்பது பற்றிய மார்க்கெட் பிளேசின் புலன்விசாரனையை அக்டோபர் 28.வெள்ளிக்கிழமை இரவு 8மணிக்கு சிபிசி தொலைக்காட்சி மற்றும் இணையத்தளத்தில் பார்க்கலாம்.
மார்க்கெட்பிளேஸ் கண்டுபிடித்த உணவு பொருட்கள் நுகர்வதற்கு பாதுகாப்பற்றனவாக இருக்கலாம் என நம்புவதாக அறிக்கை ஒன்றில் வால்மார்ட் தெரிவித்துள்ளது.
எனினும் பல சந்தர்ப்பங்களில் உணவுகள் அதன் காலாவதி திகதிக்கு முன்னயவைகளாகவும் புதியனவாகவும் தெரிகின்றன. கண்டு பிடிக்கப்பட்ட பொருட்கள் இன்னமும் குளிராக இருக்கின்றன.
மார்க்கெட்பிளேஸ் உணவு கழிவுகளை பாரிய சில்லறை விற்பனையாளர்கள் – கொஸ்ட்கோ, மெற்றோ, சோபிஸ், லோப்லாஸ் மற்றும் வால்மார்ட் உட்பட்ட- இடங்களில் பார்வையிட்டுள்ளனர்.
ஆனால் சில வால்மார்ட் அமைவிடங்களில் மட்டுமே தொட்டிகள் நிறைந்த உணவுகளை கண்டுள்ளனர்.
ஒரு முறை விஜயம் செய்தபோது மார்க்கெட்பிளேஸ் ஊழியர்கள் 12 குப்பை தொட்டிகள் நிறைந்த உணவுகளை கண்டுபிடித்தனர்.இதன் பின்னர் வால்மார்ட்டுடன் தொடர்பும் கொண்டனர்.தொடர்பு கொண்ட பின்னர் கடைகளிற்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை வால்மார்ட் பூட்டிவிட்டனர்.
Ali-Zain Mevawala தான் ஒரு வணிக வண்டி நிறைந்த உணவுகளை தினமும் எறிவதாக தெரிவித்தார்.வால்மார்ட் ஒன்றில் உற்பத்தி பிரிவு மற்றும் பேக்கரி பிரிவை நிர்வகிப்பதாக தெரிவித்தார்.
உணவு கழிவு ஒரு உலகளாவிய பிரச்சனையாகும். ஒவ்வொரு வருடமும் சில்லறை கடைகள் உணவகங்கள் மற்றும் வீடுகளில் 31 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள உணவு விரயமாகின்றதென அறிவிக்கப்பட்டுள்ளது.