கனடாவில் பரத நாட்டிய கலையை வளர்க்கும் முகமாக இருதயா நாட்டிய நிகழ்ச்சி
கனடாவில் பரத நாட்டிய கலையை வளர்க்கும் முகமாக மேற்கொள்ளும் இருதயா நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் போது, நிவேதா மூத்ததம்பி, கீர்த்தனா அருளானந்தராஜா, யழிகா மகேசுவரன் மற்றும் சிந்திய ஸ்ரீரங்கன் ஆகியோர் டொராண்டோவின் வளர்ந்து வரும் பரதநாட்டிய கலைஞர்கள்.
இவர்களின் கலை பயணத்தில் பிரபல கலைஞர்கள் ஸ்ரீ பார்வதி ரவி கண்டசாலா, மதுரை. ஆர். முரளிதரன், குச்சிப்புடி கலைஞர் உமா முரளிகிருஷ்ணா ஆகியோருடமிருந்து கற்றும் அவர்களுடன் இணைந்தும் பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும் கனடாவில் அமைந்துள்ள புற்று நோய் அமைப்புக்கும் இலங்கை, கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவ சுவாமிகள் சிறுவர்கள் இல்லத்திற்கும் என 20,000 டொலர் நிதியையும் திரட்டியுள்ளனர்.
இவர்களது கலை சேவைக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்கும் பொருட்டும் உதவிய அனைவருக்கும் வளரும் இந்த நான்கு கலைஞர்கள் சார்பில் நன்றி தெரிவித்திருந்தனர்.