கனடாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெற்றவரை நாடுகடத்த நடவடிக்கை
கியூபெக் பாதாள குழுவைச் சேர்ந்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கடந்த நாற்பத்தொன்பது ஆண்டுகளாக கனடாவில் வசித்துவரும் நபரை, அவரது சொந்த நாடான இத்தாலிக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
64 வயதுடைய குறித்த நபர், தன்னை நாடுகடத்தாது, கனடாவில் வசிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் குறித்த மனுவை ஏற்க மறுத்த கனடா உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவர் கொகேயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், 1999ஆம் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெற்று கடந்த 1967ஆம் ஆண்டு கடனாவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.