கனடாவில் சிறப்பாக நடைபெற்ற Canada: An evolving vision புத்தக வெளியீடு
கனடாவில் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளரும், சமய மற்றும் சமூகப் பிரமுகருமான திரு.சாமி அப்பாத்துரை அவர்களால் Canada: An evolving vision என்ற ஆங்கில நூல் நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழர்கள் என்றல்லாது மிகவும் ஆரோக்கியமாக கனடிய தேசிய நீரோட்டத்தைச் சார்ந்தவர்களும் பங்குபற்றியதொரு நிகழ்வாக அமைந்த இந்த நிகழ்வில் பல கனடிய பிரமுகர்களும் உரையாற்றினர்.
குறிப்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளான பார்த்தி கந்தவேல், நீதன் சாண் உள்ளிட, ஒன்றாரியோ எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிறவுன், ஸ்காபரோ ரூச்ரிவர் பாராளுமன்ற உறுப்பினர் றேமண்ட் சோ,
கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடவுள்ள முன்னைநாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டர், ரொறன்ரோ பொலிஸ்பிரிவின் றிச்சர்ட் ஹெட்ஜஸ், மத்திய பாதுகாப்புப் பொலிஸ் அதிகாரி மற்றும் சட்டத்தரணிகளான மிச் ஈகல், கெனடி பிராடியஸ், வன.பிதா ரெரி கிளஞஞர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மண்டபத்தில் இடமில்லாமல் மக்கள் முண்டியடித்துக் கலந்து கொண்டதொரு நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.