கனடாவில் காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்கள்
மத்திய அரசாங்கம் கனடாவில் காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்கள் குறித்த விசாரணையை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கின்றது.
இந்த சம்பவம் குறித்து ஒரு தேசிய பொது விசாரணை கோரி, பல தடவைகள் திரும்ப திரும்ப மத்திய அரசிடம் கோரிய போதியதிலும், இம்முறைதான் குறித்த விடயத்தினை அரசு கருத்திற்கொண்டுள்ளது.
இந்த விசாரணைக்காக லிபரல் அரசாங்கம் 40 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
1980 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் 1,100ற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயும் கொல்லப்பட்டும் உள்ளதாக 2014 மே மாதம் ஆர்.சி.எம்.பி யினர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
முதலாவது அறிக்கை வெளியிட்ட காலப்பகுதியில் இருந்து ஒரு வருடத்தின் பின்னர் மேலும் 32 பழங்குடி பெண்கள் கொலை செய்யப்பட்டும் 11ற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.