கனடாவில் இளம்பெண்ணிற்கு நடந்த கொடூரம்!! பொலிஸ் எச்சரிக்கை…
கனடா நாட்டில் பணிக்கு சென்ற இளம்பெண் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியதில் அவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Lethbridge என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Karla Rouse(25) என்ற இளம்பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் உள்ள Firestone மது விடுதியில் இளம்பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் காலை 7 மணியளவில் பணிக்கு சென்றுக்கொண்டு இருந்தபோது இளம்பெண்ணை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரை சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இன்று வரை அவர் அபாயக்கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண் மீதான் தாக்குதல் குறித்து பொலிசார் பேசியபோது, தனது காவல் பணி வரலாற்றில் ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாக தாக்கி இதுவரை பார்த்ததில்லை.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இரவில் வெளியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்மாறும் தகுந்த துணையுடன் இருட்டான பகுதிகளுக்குள் செல்லுமாறு பொலிசார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.