குட்டிஸ் ஆடலாமா சீசன் 3 இறுதிச்சுற்று – 2017 Chinese Culture Centre of Grater Toronto இல் 15.12.2017 வெள்ளிக்கிழமை பி.ப 6.30 மணிக்கு கோலாகலமாக இடம்பெற்றது.
இவ் இறுதிச்சுற்றுக்கு சாவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாக கொண்ட செல்வி.அபிஷா அகிலன் திறமையாக போட்டியிட்டு 1 புள்ளி வித்தியாசத்தில் 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்தார்.
மேலும் இவரின் இச் சாதனைக்கு ஊன்றுகோலாய் இருந்த பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர், சக மாணவர்களுக்கு செல்வி அபிஷா தனது நன்றிகளையும் தெரிவித்ததோடு நின்றுவிடாமல் ” நான் மேலும் சிறப்புற விளங்கி எனது பெற்றோருக்கும் எனது தாய் மண்ணுக்கும் பெருமையை அளித்தருவேன் ” என உறுதிமொழி அளித்தார்.
மேலும் இவர் எமது தமிழ் சி என் என் இணையத்தள இயக்குனர் திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வி. அபிஷா அகிலன் மேலும் பல சாதனைகள் படைத்து சிறப்புற வாழ தமிழ் சி என்என் இணையத்தள குழுமம் சார்பாகவும் எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.