ஈழத்திலிருந்து அகதியாக கனடாவுக்கு குடிபெயர்ந்து 32 வருடங்கள் வாழ்ந்த பிறகு லோகதாசன் தர்மதுரை ஆங்கிலத்தில் எழுதியதுதான் The Sadness of Geography எனும் நூல். இதை கனடாவின் மிகப்பிரலமான டண்டேர்ன் பதிப்பகம் வெளியிட்டது. நூல் விற்பனை உலக அளவில் வெற்றியீட்டியிருக்கிறது.
ரொறொன்ரோ பல்கலைக்கழக நூலகம் இந்த நூலை ஆக விலைப்பட்ட நூல் (Best Seller) என்று அறிவித்திருக்கிறது. இப்பொழுது வேறொரு பதிப்பகமும் செய்யாத ஒரு காரியத்தை டண்டேர்ண் செய்திருக்கிறது. இவருடைய ஆங்கில நூலை ’நிலவியலின் துயரம்’ எனும் தலைப்பில் தமிழில் வெளியிட்டிருக்கிறது. கனடாவில் ஒரு மைய நீரோட்டப் பதிப்பகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே நூலை வெளியிடுவது வரலாற்றில் இதுவே முதல் என்பதால் நாம் பெருமைப்படலாம். இதை மொழிபெயர்த்தவர் பெயர் ரிஷான் செர்ரீஃப்.