கனடாவில் அதிகரித்து வரும் ஆங்கிலம் கதைப்பவர்களின் தொகை
தற்பொழுது கனடாவில் ஆங்கிலம் கதைப்பவர்களின் தொகை முன்பை விட பெருமளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடியர்கள் பேசும் மொழிகள் தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்தே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
கனடாவில் முன்பை விட அதிகமானவர்கள் தமது பிரதான மொழியாக ஆங்கிலத்தை கொண்டிருக்கும் அதேவேளை, இன்னும் பலர் தமது இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை கதைப்பது தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஆங்கிலம் அதிகம் பேசும் மக்கள் உள்ள நாடுகளின் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில், ஏழாவது இடத்தில் கனடா இருக்கின்றமை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் சில வருடங்களில் கனடாவில் ஆங்கிலம் கதைப்பவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் 75 சதவீதத்தினை விட அதிகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.