கனடாவில் அதிகரிக்கப்படும் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம்!
கனடாவில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக அல்பேர்ட்டா மாகாண அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொழிலாளர் துறை அமைச்சரான கிறிஸ்டினா க்ரே வெளியிட்டுள்ளார். அதில், கடந்தாண்டு அளித்த உறுதிமொழிகளை தற்போது நிறைவேற்றி வருவதாகவும், அவற்றில் ஒரு திட்டமான ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை மணிக்கு 15 டொலராக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதன் முதல் கட்டமாக, அடுத்த மாதம் முதல் மணிக்கு 12.20 டொலரும், அடுத்தாண்டு ஒக்டோபர் மாதம் முதல் மணிக்கு 13.60 டொலரும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் மணிக்கு குறைந்தபட்ச சம்ளமாக 15 டொலர் வழங்கப்படும் என கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள மாகாணங்களில் அல்பேர்ட்டா மாகாணத்தில் தான் அதிகமான குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாக்கும்
– See more at: http://www.canadamirror.com/canada/69898.html#sthash.MvD30URB.dpuf