கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நேற்று மூச்சுவிடச் சிரமப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்துவிட்டமை தெரியவந்துள்ளது.
கொக்குவில் மேற்கு கொக்குவிலைச் சேர்ந்த இராசையா மகாதேவா என்ற 83 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.