கனடாவிற்கு வருகை தந்துள்ள சீன பிரதமர்.
ஒட்டாவா-சீன பிரதமர் லி கிக்கியாங் கனடா வந்துள்ளார். சீன தலைவர் ஒருவர் ஆறு வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கனடா வந்துள்ளார்.
பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ உட்பட்ட பல பிரமுகர்கள் இவரை வரவேற்றனர். இரு தலைவர்களும் நீண்ட நேர சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.அதனை தொடர்ந்து இன்றய நாளின் பிற்பகுதியில் செய்தியாளர் மகாநாடு ஒன்றில் கலந்து கொள்வார்.
இரு நாடுகளும் ஒரு உயர்-மட்ட பாதுகாப்பு உரையாடலை- ஒரு சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் உடன்பாட்டினை நிறுவுதல் உட்பட்ட-மேற் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீன பிரதமர் ஒரு நாடு கடத்தும் உடன்பாட்டினை தேடும் எண்ணத்துடன் கனடா வந்துள்ளார் என கூறப்படுகின்றது.
சீன தலைவரின் விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே ட்ருடோ எதிர்க்கட்சிகளிடமிருந்து–சீனாவிலிருந்து குடிபெயர்ந்தவர்களை திருப்பி அனுப்ப சிந்திப்பது குறித்து– அரசியல் சூட்டை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
யு.எஸ்சிற்கு அடுத்ததான சீனா கனடாவின் இரண்டாவது மிக பெரிய வர்த்தக பங்காளியாகும்.