கனடாவிற்குள் தொடரும் சட்டவிரோதமான எல்லை கடக்கும் அகதி கோரிக்கையாளர்கள்!
கனடாவிற்குள் சட்ட விரோதமாக ஏன் மக்கள் எல்லை கடந்து வருகின்றார்கள் என்பது குறித்த சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி அளிக்கப்பட்ட பயண தடை மற்றும் கடுமையான குடியேற்ற நடவடிக்கை அனைவரையும் வடக்கு நோக்கி நகர வைத்துள்ளது.
இந்த வாரம் கனடாவிற்கான யுஎன் அகதிகள் நிறுவன பிரதிநிதி ஜீன்-நிக்கலஸ் பியுஸ் கியுபெக் எல்லைக்கு சென்றுள்ளார். அகதி கோரிக்கையாளர்களின் செயல்பாட்டினை கவனிக்கவும் அவர்களுடன் உரையாடவும் சென்றார்.
யு.எஸ்.தங்களை வரவேற்கும் நிலையில் இல்லை என தாங்கள் உணர்வதாக அகதிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அங்கு நியாயமான செயல்பாடுகள் இல்லை என உணர்வதாலும் கனடா வர தீர்மானித்ததாக அகதி கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது.
புலம் பெயரந்தவர்களிற்கு சரியான வதிவிட தகைமை இருந்த போதிலும் கனடா ஒரு வரவேற்பு தன்மை கொண்ட நாடென்பதால் கனடா வர விரும்பியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த குளிர்காலத்தில் பெரும் ஆபத்தையும் எதிரநோக்கி உறை பனிநிறைந்த பனி குவியல்கள் ஊடாக நடைபயணத்தில் எல்லையை கடக்க முன்வந்துள்ளனர்.
இவர்கள் உபயோகிக்கும் எல்லைபாதைகள் அதிகார பூர்மற்ற பாதைகளாகும். இதற்கான காரணம் Canada-U.S. Safe Third Country Agreement ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிபி பல குடிவரவு வழக்கறிஞர்களுடன் இணைந்து இந்த உடன்பாட்டை 90நாட்களிற்கு இடைநிறுத்தம் செய்ய கோரியுள்ளது. இம்முயற்சி மக்களை அவர்களது உயிர்கள் உடல்களை ஆபத்தில் சிக்க வைக்கும் முயற்சி என அவர்கள் வாதாடியுள்ளனர்.
இந்த உடன்படிக்கையை மாற்றும் அல்லது இடைநிறுத்தும் திட்டம் இல்லை என குடிவரவு அமைச்சர் Ahmed Hussen தெரிவித்துள்ளார்.
இந்த Canada-U.S. Safe Third Country Agreement டிசம்பர் 5. 2002ல் கைச்சாத்திடப்பட்டது. செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து ஏற்படுத்தப்பட்டது.
தற்சமயம் யு.எஸ். மட்டுமே ஒரு மூன்றாவது பாதுகாப்பு நாடாக குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் கனடாவினால் நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் மற்றய நாடுகளும் சேர்க்கப்படலாம்.
இவர்கள் எல்லையை கடந்ததும் என்ன நடக்கும்?
நியமனமான நுழைவு துறைமுகங்களில் கனடிய சட்டமியற்றலை நிர்வகிக்கும் பொறுப்பை கனடா எல்லை சேவைகள் ஏஜன்சி வகிக்கும்.இதே சமயம் நுழைவு எல்லைகளிற்கிடையே சட்டத்தை அமுலாக்கும் பொறுப்பை ஆர்சிஎம்பி மேற்கொள்ளும்.
நுழைவு எல்லைக்கு வெளியே யாராவது ஆர்சிஎம்பியினரால் கண்டறியப்பட்டால் அவர்கள் சட்ட விரோதமாக நுழைய முற்பட்டதாக எச்சரிக்கப்படுவதுடன் அருகாமையில் இருக்கும் எல்லை கடக்கும் அதிகார கடக்கும் பகுதிக்கு தெரிவிக்கப்படும்.
இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்படுவதுடன் அடையாள சோதனைக்கும் உட்படுத்தப்படுவர்.
பின்னர் கனடா எல்லை சேவைகள் அதிகாரிகளிடம் செயலாக்கத்திற்காக ஒப்படைக்கப்படுவர்.
அகதிகோரிக்கை தகுதியானதென கருதப்படும் பட்சத்தில் நேர்காணல் கைரேகை பதிவு புகைப்படம் எடுத்தல் அத்துடன் பாதுகாப்பு மற்றும் குற்றப்பதிவு தேடுதல் நடாத்தப்படும்.
தகுதியானதென கருதப்பட்டபின்னர் ஆவணங்கள் குடிவரவு அகதிகள் சபைக்கு மாற்றப்படும். இல்லையெனில் அகற்றப்படுவார்.
அகதிகோரிக்கையாளர்களின் எண்ணிக்கை:
அகதி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை மனிரோபா, கியுபெக் ஆகிய இடங்களில் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக நுழைந்துள்ளவர்களின் எண்ணிக்கை மறறும் அகதி அந்தஸ்து பெற்றவர்களின் துல்லியமான ஒரு எண்ணிக்கை பெறுவது கடினமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ந்திகதியிலிருந்து கிட்டத்தட்ட 139 அகதி கோரிக்கையாளர்கள் மனிரோபாவில் கனடா எல்லையை கடந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
மனிரோபா முதல்வர் பிரயன் பலிஸ்ரர் இதனை ஒரு தேசிய பிரச்சiயாக அழைத்து இது குறித்து ஒரு ஒருங்கிணைந்த அணுகு முறைக்கு இட்டு செல்லுமாறு கேட்டுள்ளார்.
ஒரு அகதி பதில் ஒருங்கிணைப்பாளருக்கு 70,000டொலர்கள் நிதியளிப்பு-14 அவரசகால தங்குமிட அலகுகளிற்கும் மற்றும் சட்ட துணை சேவைகள் மற்றும் போக்குவரத்து செலவுகளிற்கு உதவ 110,000டொலர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.