கனடாவின் தேசிய பழங்குடியினரின் சூரியோதய விழா.
யூன் மாதம் 21ந்திகதியான இன்றய நாள் கனடாவின் தேசிய பழங்குடியிரின் தினமாகும்.நாட்டின் முதற் குடியினரின் வருடாந்த கொண்டாட்டம் இடம்பெறுகின்றது.
இக்கொண்டாட்டம் பழங்குடியினரின் அங்கீகாரம், பிரதிபலிப்பு மற்றும் கல்வி போன்றனவற்றை பிரதிபலிக்கின்றது.இன்றய தினமான செவ்வாய்கிழமை இத்தினத்தின் 20வது ஆண்டு நிறைவை குறிக்கின்றது.
1996ல் இந்த நிகழ்வு அச்சமயம் கவர்னர் ஜெனரலாக இருந்த றோமியோ லிபிளாங் என்பவரால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. தேசிய பழங்குடியினர் தினம் வருடந்தோறும் யூன் 21ல் கோடைகால ஆரம்பத்தில் நிகழ்வதற்காகவும் ஆதி பூர்வீக வாசிகளின் கலாச்சார முக்கியத்துவத்தை பேணுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நாளில் பெரும்பாலான முதற்குடியினர், இனுயிட் மற்றும் மெற்றிஸ் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை கொண்டாடுகின்றனர்.
இந்த நாள் பிராந்திய சட்டரீதியான விடுமுறை நாளாக வட மேற்கு நிலப்பகுதிகள் கணித்துள்ளன.
பழங்குடி தலைவர்கள் மற்றும் பல மட்டங்களிலுமுள்ள அரசியல்வாதிகள் நாடு பூராகவும் உள்ள பல நகரங்களில் செவ்வாய்கிழமை சூரிய உதயத்தின் போது ஒன்று ஒன்றுகூடி சிறப்பு பாரம்பரிய விழாக்களில் பங்கு கொள்கின்றனர்.
மேயர் ஜோன்ரொறியும் ரொறொன்ரோவில் இடம்பெறும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றார்.
இஇவ்விழாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற தேசிய பழங்குடியினர் தின சூரிய உதய கொண்டாட்டத்தை தொடர்ந்து கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ ஒட்டாவா ஆற்றில் ஒரு வோயேஜியர் படகின் துடுப்புக்களை வலித்தார்.
இச்செயல் செவ்வாய்கிமை அனைத்து கனடியர்களும் தங்கள் நேரத்தின் சிறு பகுதியை கனடாவின் பழங்குடியினர், மெடிஸ் மற்றும் இனூயிட் மக்களின் தனிப்பட்ட பாரம்பரியத்தை கொண்டாடுமாறு அழைப்பு விடுவது போன்று அமைகின்றதென தெரிவதாக கூறப்படுகின்றது.